இந்தியா, கனடா இடையே விரைவில் வர்த்தக பேச்சு
இந்தியா, கனடா இடையே விரைவில் வர்த்தக பேச்சு
இந்தியா, கனடா இடையே விரைவில் வர்த்தக பேச்சு
ADDED : செப் 21, 2025 12:08 AM

புதுடில்லி:வர்த்தக பேச்சுகளை மீண்டும் தொடங்க இந்தியாவும் கனடாவும் முடிவு செய்துள்ளன.
கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ இருந்தபோது, இந்தியாவுடன் அந்நாட்டின் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அதனால், இருநாடுகள் இடையே துவங்கிய வர்த்தக பேச்சு, பாதியில் நின்று போனது.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இந்தியாவுடன் நல்லுறவை ஏற்படுத்த கனடா ஆர்வம் காட்டி வருகிறது. அண்மையில் கனடா வெளியுறவு துறை அமைச்சர் டேவிட் மாரிசன் டில்லி வந்திருந்தார்.
இந்திய வெளியுறவு துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அமைச்சக உயரதிகாரிகளை டேவிட் மாரிசன் சந்தித்துப் பேசினார். இருநாடுகள் இடையே வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, அணுமின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் வர்த்தகத்தை மேம்படுத்துவது பற்றி அப்போது ஆலோசிக்கப்பட்டது.
மேலும், இந்தியா, கனடா இடையே நின்றுபோன வர்த்தக பேச்சை மீண்டும் துவங்கவும் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது பேச்சை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் வர்த்தக பேச்சு நடைபெறும் என்றும் கனடா மற்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.