'செமி கண்டக்டர்' வடிவமைப்புக்கு தமிழகத்தில் திறன்மிகு மையம் டெண்டர் வெளியிட்டது 'டிட்கோ'

ADDED : செப் 05, 2025 10:50 PM

சென்னை:தமிழகத்தில் 'செமி கண்டக்டர்' வடிவமைப்பு மற்றும் சோதனை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான உயர் திறன் மையத்தை அமைப்பதற்கு கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த மையம் அமைப்பதற்கான செலவில், 75 கோடி ரூபாயை தமிழக அரசு நிதியுதவியாக வழங்கும். செமி கண்டக்டர் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்க்க, 'தமிழக செமி கண்டக்டர் இயக்கம் - 2030' திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்காக, 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு அங்கமாக, செமி கண்டக்டர் வடிவமைப்பு மற்றும் சோதனைக்கு உயர் திறன்மிகு மையத்தை, தனியார் நிறுவனத்துடன் இணைந்து, தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைக்க உள்ளது.
இதற்காக, தகுதியான கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. கூட்டு நிறுவனம் தன் செலவில் திறன்மிகு மையத்தை அமைக்க வேண்டும். மொத்த செலவில் 40 சதவீதம், அதிகபட்சம் 75 கோடி ரூபாய் வரை அரசு வழங்கும்.
சென்னை, செப். 6-
தமிழகத்தில் 'செமி கண்டக்டர்' வடிவமைப்பு மற்றும் சோதனை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான உயர் திறன் மையத்தை அமைப்பதற்கு கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் அழைப்பு வி டுத்துள்ளது.
இந்த மையம் அமைப்பதற்கான செலவில், 75 கோடி ரூபாயை தமிழக அரசு நிதியுதவியாக வழங்கும். செமி கண்டக்டர் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்க்க, 'தமிழக செமி கண்டக்டர் இயக்கம் - 2030' திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்காக, 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு அங்கமாக, செமி கண்டக்டர் வடிவமைப்பு மற்றும் சோதனைக்கு உயர் திறன்மிகு மையத்தை, தனியார் நிறுவனத்துடன் இணைந்து, தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைக்க உள்ளது.
இதற்காக, தகுதியான கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. கூட்டு நிறுவனம் தன் செலவில் திறன்மிகு மையத்தை அமைக்க வேண்டும். மொத்த செலவில் 40 சதவீதம், அதிகபட்சம் 75 கோடி ரூபாய் வரை அரசு வழங்கும்.
வரும் 2027க்குள் நம் நாட்டின் மின்சார மின்னணு சந்தை மதிப்பு, 43,000 கோடி ரூபாயை எட்டும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் ஆலைகள் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளன.