
80,500
இந்தியாவின் பிளாஸ்டிக் குழாய் உற்பத்தித்துறை, இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும் என மோதிலால் ஓஸ்வால் நிதி சேவைகள் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. வீட்டு வசதி, நீர்ப்பாசனம், நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றின் வலுவான தேவைகள் காரணமாக, இந்தியாவின் பிளாஸ்டிக் குழாய் உற்பத்தித்துறையின் ஆண்டு வளர்ச்சி விகிதமானது, 2024 - 27ம் நிதியாண்டுகளில் கிட்டத்தட்ட 14 சதவீதம் அதிகரித்து, 80,500 கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2,298
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு, 2,298 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., செலுத்துவது தொடர்பாக, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2018 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரையிலான 5 ஆண்டு காலத்திற்கான, ஜி.எஸ்.டி., தொகை குறித்து, ஜி.எஸ்.டி., நோட்டீஸ் பெறப்பட்டுள்ளதாக பங்கு சந்தை தாக்கலில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், இதற்கான நோட்டீஸ் மஹாராஷ்டிரா மாநில மும்பை - தெற்கு ஜி.எஸ்.டி., கூடுதல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது-.