தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு
தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு
தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 31, 2024 12:21 AM

திருப்பூர்:இந்தியாவின், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், திருப்பூரின் பங்களிப்பு, 55 சதவீதமாக உள்ளது. சர்வதேச சந்தைகளில், இந்தியாவுக்கு போட்டியாக உள்ள நாடுகள், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் முந்தி செல்கின்றன.
பருத்தி நுாலிழை ஆடை உற்பத்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த திருப்பூர், கடந்த ஓராண்டாக, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியிலும் கால்பதித்து விட்டது.
மொத்த உற்பத்தியில், 20 சதவீதம் அளவுக்கு செயற்கை நுாலிழை ஆடைக்கு மாறி வருகின்றனர்.
இருப்பினும், புதிய தொழில்நுட்பங்கள் வாயிலாக, சர்வதேச தரத்துடன் ஆடை உற்பத்தி செய்ய, தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அவசியம் என, திருப்பூர் ஏற்றுமதியாளர் எதிர்பார்க்கின்றனர்.
மத்திய, மாநில அரசு பட்ஜெட்டில், திருப்பூர் பின்னலாடை தொழில்துறையின் நீண்டநாள் எதிர்பார்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என, தொழில் துறையினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், ''பின்னலாடை உற்பத்தி, மேம்பாட்டுக்கு புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம், வளர்ச்சி வாரியம் அமைக்க கோரிக்கை வைத்துள்ளோம்,'' என்றார்.