'ஸ்ரீசிமென்ட்' நிறுவனத்துக்கு வரித்துறை நோட்டீஸ்
'ஸ்ரீசிமென்ட்' நிறுவனத்துக்கு வரித்துறை நோட்டீஸ்
'ஸ்ரீசிமென்ட்' நிறுவனத்துக்கு வரித்துறை நோட்டீஸ்
ADDED : பிப் 06, 2024 10:33 AM
புதுடில்லி : வரி ஏய்ப்பு தொடர்பாக ஸ்ரீ சிமென்ட் நிறுவனத்துக்கு 4,000 கோடி ரூபாய் செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வரி ஏய்ப்பு தொடர்பாக சிமென்ட் உற்பத்தியாளரான ஸ்ரீ சிமென்ட் நிறுவனத்திற்கு சொந்தமான பியாவர், ஜெய்ப்பூர், சித்தோர்கர் மற்றும் அஜ்மீர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் திடக்கழிவு மேலாண்மையில் 7,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு செய்துள்ளது கண்டறியப்பட்டது.
இது குறித்து வருமான வரித்துறை நடத்தி வந்த விசாரணையில், வரி ஏய்ப்பில் ஈடுபட்டது உறுதியானதைத் தொடர்ந்து, தவறான உரிமை கோரல்கள், வரி விலக்கு கோரிக்கைகள் மற்றும் செலுத்த வேண்டிய வரி, அதற்கான வட்டி மற்றும் அபராதம் உட்பட 4,000 கோடி ரூபாயை செலுத்துமாறு, அந்நிறுவனத்திற்கு வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சிமென்ட் நிறுவனம், வருமான வரித்துறையின் நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும், ஒட்டுமொத்த நிர்வாகக்குழுவும், அதிகாரிகளும் அளித்து வருவதாகவும், ஊடகங்களில் வெளியாகும் அனைத்து தகவல்களும் தவறானவை என்றும் தெரிவித்துள்ளது.
வரி ஏய்ப்பில் ஈடுபட்டது உறுதியானதை அடுத்து, ரூ.4,000 கோடி செலுத்துமாறு நோட்டீஸ்