ரூ.35,000 கோடி முதலீடு டாடா மோட்டார்ஸ் இலக்கு
ரூ.35,000 கோடி முதலீடு டாடா மோட்டார்ஸ் இலக்கு
ரூ.35,000 கோடி முதலீடு டாடா மோட்டார்ஸ் இலக்கு
ADDED : ஜூன் 10, 2025 07:00 AM
புனே : டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 2030க்குள் அதன் பயணியர் கார் வணிகத்தில், 33,000 - 35,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, நிதியாண்டு வருவாயில் 6 முதல் 8 சதவீதம் வரை மூலதன செலவுக்காக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இதில், மின்சார வாகன வணிகத்திற்கு மட்டும், 16,000 முதல் 18,000 கோடி ரூபாய் வரை முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது எட்டு மாடல் கார்களை வைத்து உள்ள இந்நிறுவனம், அடுத்த நான்கு ஆண்டுகளில், 15 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
சியரா எஸ்.யூ.வி., அவின்யா பிராண்டின் கீழ் இரு இ.வி., கார்கள், இரு புதிய எரிவாயு மற்றும் மின்சார கார்கள் என மொத்தம் ஏழு புதிய மாடல்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. அத்துடன், 23 மேம்படுத்தப்பட்ட கார்களும் வர உள்ளன. பயணியர் கார் சந்தையில் இந்நிறுவனம் 14 சதவீதம் பங்கு வைத்துள்ளது.