செமிகண்டக்டர் சிறப்பு மண்டலம் அரசு ஒப்புதல்
செமிகண்டக்டர் சிறப்பு மண்டலம் அரசு ஒப்புதல்
செமிகண்டக்டர் சிறப்பு மண்டலம் அரசு ஒப்புதல்
ADDED : ஜூன் 10, 2025 07:00 AM
புதுடில்லி : செமிகண்டக்டர் மற்றும் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்காக, மைக்ரான் மற்றும் எய்கஸ் குழுமத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
'மைக்ரான் செமிகண்டக்டர் டெக்னாலஜி இந்தியா' நிறுவனம், குஜராத்தின் சனந்தில் 37.64 ஹெக்டேர் பரப்பளவில், 13,000 கோடி முதலீட்டில், சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்க உள்ளது.
எய்கஸ் குழுமம், கர்நாடகாவின் தார்வாடில் 11.55 ஹெக்டேர் பரப்பளவில் தன் சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைத்து, 100 கோடி ரூபாய் முதலீட்டில், மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி செய்ய உள்ளது.