'மாருதி சுசூகி'யை பின்னுக்கு தள்ளியது 'டாடா மோட்டார்ஸ்'
'மாருதி சுசூகி'யை பின்னுக்கு தள்ளியது 'டாடா மோட்டார்ஸ்'
'மாருதி சுசூகி'யை பின்னுக்கு தள்ளியது 'டாடா மோட்டார்ஸ்'
ADDED : ஜன 31, 2024 12:35 AM

'மாருதி சுசூகி'யை பின்னுக்கு தள்ளியது 'டாடா மோட்டார்ஸ்'
நாட்டின் அதிக சந்தை மதிப்பு கொண்ட ஆட்டோமொபைல் நிறுவனம் என்ற அந்தஸ்தை, நேற்று 'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம் பெற்றது. இதுவரை அதிக சந்தை மதிப்பு கொண்ட ஆட்டோமொபைல் நிறுவனமாக இருந்த 'மாருதி சுசூகி' நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்த இடத்தை பிடித்துள்ளது.
நேற்று வர்த்தக நேர முடிவில் மாருதி சுசூகி நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.13 லட்சம் கோடி ரூபாயாகவும்; டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.16 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும், டாடா மேட்டார்சின் பங்கு விலை 35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் மாருதி சுசூகியின் பங்கு விலை, நான்கு சதவீதம் சரிந்துள்ளது.
'டொயோட்டா' மூன்று மாடல்கள் விற்பனை நிறுத்தி வைப்பு
டீசல் என்ஜின் குறைபாடுகள் காரணமாக, இந்தியாவில் 'இன்னோவா கிரிஸ்டா, பார்ச்சூனர், ஹைலக்ஸ்' ஆகிய மூன்று கார்களின் விற்பனையை நிறுத்தி வைப்பதாக 'டொயோட்டா' நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்திய சான்றழிக்கும் தேர்வின்போது இந்த குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட இந்த மாடல்களில் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது குறைபாடு கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்களின் உமிழ்வு அல்லது பாதுகாப்பில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் டொயோட்டா தெரிவித்துள்ளது. ஏற்கனவே அனுப்பப்பட்டு இன்னும் வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யப்படாத கார்களுக்கு, இந்த நிலை குறித்து விளக்கமளிக்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.