ஐபோன் ஏற்றுமதியால் டாடா எலக்ட்ரானிக்ஸ் வருமானம் அமோகம்
ஐபோன் ஏற்றுமதியால் டாடா எலக்ட்ரானிக்ஸ் வருமானம் அமோகம்
ஐபோன் ஏற்றுமதியால் டாடா எலக்ட்ரானிக்ஸ் வருமானம் அமோகம்
ADDED : செப் 21, 2025 12:20 AM

புதுடில்லி:கடந்த நிதியாண்டில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் வருமானத்தில், அமெரிக்க ஐபோன் ஏற்றுமதியின் பங்களிப்பு 37 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஐபோன் தயாரிப்பில் சீனாவை சார்ந்திருப்பதை குறைக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் முடிவால், டாடா எலக்ட்ரானிக்ஸ் புதிய உற்சாகம் பெற்றுள்ளது.
நிறுவன பதிவாளரிடம் தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த நிதியாண்டில் அமெரிக்காவுக்கு 23,112 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபோன்களை ஏற்றுமதி செய்திருப்பதாக டாடா எலக்ட்ரானிக்ஸ் தெரிவித்து இருந்தது.
இதன்படி, மொத்த வருமானத்தில் 37 சதவீதம், ஐபோன் ஏற்றுமதி வாயிலாக கிடைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஐபோன்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.