தமிழகம், புதுச்சேரியில் ரூ.63,000 கோடி வசூல்
தமிழகம், புதுச்சேரியில் ரூ.63,000 கோடி வசூல்
தமிழகம், புதுச்சேரியில் ரூ.63,000 கோடி வசூல்
ADDED : ஜூலை 02, 2025 12:20 AM

தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல ஜி.எஸ்.டி., சார்பில் சென்னையில் நேற்று எட்டாம் ஆண்டு ஜி.எஸ்.டி., தின விழா நடந்தது.
இதில் பங்கேற்ற ஜி.எஸ்.டி., முதன்மை தலைமை கமிஷனர் ஏ.ஆர்.எஸ்., குமார் பேசியதாவது:
தமிழகம், புதுச்சேரியில் 2024--25 நிதியாண்டில் மட்டும் 63,339 கோடி ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இது 2023--24ம் நிதியாண்டை விட 9.23 சதவீதம் அதிகம். நடப்பு நிதியாண்டில் மே மாதம் வரை 11,209 கோடி வரி வசூலாகி உள்ளது. சரக்கு வரி செலுத்த தவறியவர்கள், வரி ஏய்ப்பு, உள்ளிட்டவற்றில் கடந்தாண்டை விட 23.85 சதவீதம் வரை வசூல் செய்யப்பட்டு இருக்கின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.