ஜி.எஸ்.டி., வசூல் 6 சதவிகிதம் உயர்வு
ஜி.எஸ்.டி., வசூல் 6 சதவிகிதம் உயர்வு
ஜி.எஸ்.டி., வசூல் 6 சதவிகிதம் உயர்வு
ADDED : ஜூலை 02, 2025 12:17 AM

புதுடில்லி,:கடந்த ஜூன் மாதத்துக்கான நாட்டின் ஜி.எஸ்.டி., வசூல் 6.20 சதவீதம் உயர்ந்து, 1.84 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எனினும் முந்தைய இரண்டு மாதங்களாக ஜி.எஸ்.டி., வசூல் 2 லட்சம் கோடி ரூபாயை கடந்த நிலையில், கடந்த மாதம் குறைந்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதத்தில் வசூல் 1.74 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த மாதம் 10,676 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு ஜூன் மாதத்தின் 10,218 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் 4 சதவீதம் அதிகமாகும்.