சாட்காம் சேவை உரிமம் பெற்றது ஸ்டார்லிங்க்
சாட்காம் சேவை உரிமம் பெற்றது ஸ்டார்லிங்க்
சாட்காம் சேவை உரிமம் பெற்றது ஸ்டார்லிங்க்
ADDED : ஜூன் 07, 2025 12:23 AM

இந்தியாவில் செயற்கைக்கோள் தொடர்பு சேவைகளுக்கான உரிமத்தை, எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத்தொடர்ந்து, தொலைத்தொடர்பு துறையிடம் இருந்து உரிமம் பெற்ற மூன்றாவது நிறுவனமாக ஸ்டார்லிங்க் மாறியுள்ளது. இந்தியாவில் சாட்காம் சேவைகளை வழங்க, பார்தியின் ஒன்வெப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே ஒப்புதலை பெற்றுள்ளன.
கடந்த 2022ம் ஆண்டு முதல், இந்தியாவில் வணிக உரிமங்களுக்காக ஸ்டார்லிங்க் காத்திருந்தது. ஆனால், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் ஒப்புதல் வழங்குவது காலதாமதமாகி வந்தது.
இப்போது ஒப்புதல் கிடைத்திருப்பது, ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. இந்நிலையில், அமேசானின் கைபர், இந்திய உரிமம் பெற ஒப்புதலுக்காக இன்னமும் காத்திருக்கிறது.