பிளிப்கார்ட் நிறுவனம் கடன் வழங்க அனுமதி
பிளிப்கார்ட் நிறுவனம் கடன் வழங்க அனுமதி
பிளிப்கார்ட் நிறுவனம் கடன் வழங்க அனுமதி
ADDED : ஜூன் 07, 2025 12:24 AM

இந்தியாவின் முன்னணி இ - காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், என்.பி.எப்.சி., எனப்படும் வங்கி சாரா நிதி நிறுவனத்துக்கான உரிமத்தை ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெற்றுள்ளது.
இந்தியாவில் ஒரு பெரிய இ - காமர்ஸ் நிறுவனத்துக்கு, வங்கி சாரா நிதி நிறுவனத்துக்கான உரிமத்தை ரிசர்வ் வங்கி அளிப்பது இதுவே முதல்முறை. இதன் வாயிலாக, நேரடி கடன் வழங்கும் முதல் இந்திய இ - காமர்ஸ் நிறுவனமாக பிளிப்கார்ட் மாறியுள்ளது.
இந்த உரிமத்தின் வாயிலாக, பிளிப்கார்ட் தன் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக கடன் வழங்குவதுடன், இ.எம்.ஐ., வசதிகளையும் வழங்க முடியும். ஆனால், டிபாசிட் தொகை எதையும் பெற இயலாது. தற்போது பிளிப்கார்டின் 80 சதவீத பங்குகளை, அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.