ஆந்திராவில் ஆலை அமைக்கும் ஸ்ரீஜா மில்க் - மதர் டெய்ரி
ஆந்திராவில் ஆலை அமைக்கும் ஸ்ரீஜா மில்க் - மதர் டெய்ரி
ஆந்திராவில் ஆலை அமைக்கும் ஸ்ரீஜா மில்க் - மதர் டெய்ரி
ADDED : மே 27, 2025 05:27 AM
புதுடில்லி : ஸ்ரீஜா மகிளா மில்க் புரொட்யூசர் கம்பெனி மற்றும் மதர் டெய்ரி நிறுவனங்கள், ஆந்திராவில் ஆலை அமைப்பதற்காக முதலீடு செய்ய உள்ளதாக, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் வாயிலாக 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
'ஸ்வர்ண ஆந்திரா' தொலைநோக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டத்தில் உள்ள குப்பம் பகுதியில், திருப்பதியை தலைமையிடமாக கொண்ட ஸ்ரீஜா பால் உற்பத்தியாளர் அமைப்பும், டில்லியை தலைமையகமாக கொண்ட மதர் டெய்ரி நிறுவனமும் தொழிற்சாலைகளை அமைக்கத் தேவையான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
குப்பத்தில், ஸ்ரீஜா பால் உற்பத்தியாளர் அமைப்பு, ஒரு பால் உற்பத்தி மையம் மற்றும் கால்நடை தீவன பதப்படுத்துதல் பிரிவை அமைக்க உள்ளது. இதேபோன்று, மதர் டெய்ரி நிறுவனம் பழக் கூழ் பதப்படுத்தும் பிரிவை நிறுவ திட்டமிட்டுள்ளது. இதற்காக குப்பம் பகுதி மேம்பாட்டு ஆணையத்துடன் இரு நிறுவனங்களும் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.