வெளிநாட்டு சுகாதார பணி: கேரளா முன்னிலை
வெளிநாட்டு சுகாதார பணி: கேரளா முன்னிலை
வெளிநாட்டு சுகாதார பணி: கேரளா முன்னிலை
ADDED : பிப் 24, 2024 09:12 PM

புதுடில்லி:மத்திய கிழக்கு மற்றும் வடஆப்ரிக்க நாடுகளுக்கு, சுகாதாரப் பணிக்கான வேலைக்கு செல்லும் இந்தியர்களில் கேரள மாநிலம் முன்னிலையில் உள்ளது. மேலும், ஆண் செவிலியர்களுக்கான எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அலுவலக பணிக்கான தளமான ஹன்ட்ர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க நாடுகளுக்கான சுகாதாரப் பணிகளுக்காக செல்லும் இந்தியர்களில் கேரளா முன்னிலை வகிக்கிறது. கேரளாவிற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்கள் முன்னணி மாநிலங்களாக உள்ளன.
குறிப்பாக, கேரளாவில் இருந்து சுகாதாரப்பணிக்காக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து, கடந்த 2023ல் 3.3 மடங்காக உயர்ந்துள்ளது.
மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற நாடுகள், வேலைவாய்ப்பு தேடும் இந்திய சுகாதாரத்துறை நிபுணர்களுக்கு மிகவும் விருப்பமான இடங்களாக உள்ளன.
நீட்டிக்கப்பட்ட விசாக்கள், அதிக ஊதியம், அதிநவீன சுகாதார உள்கட்டமைப்பு உள்ளிட்ட கவர்ச்சிகரமான சலுகை களை இந்நாடுகள் வழங்குகின்றன.
மத்திய கிழக்கு மற்றும் வடஆப்ரிக்க நாடுகளில் உள்ள முதலாளிகள் பிராந்திய விற்பனை, வினியோகஸ்தர்கள் மேலாண்மை மற்றும் திட்ட மேலாண்மை ஆகிய துறைகளில் அனுபவம் மற்றும் தகுதி வாய்ந்த திறமையாளர்களை தேடுகின்றனர்.
கூடுதலாக, டிப்ளமோக்கள் முதல் செவிலியர் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் உயர் பட்டபடிப்புகள் வரையிலான தகுதிகளைக் கொண்ட சுகாதார நிபுணர்களுக்கு அதிக தேவை உள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க நாடுகளுக்குச் செல்லும் சுகாதாரப் பணியாளர்கள் பெரும்பாலும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். தற்போது ஆண் செவிலியர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிரிகத்துள்ளது.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.