ADDED : மே 25, 2025 12:44 AM

ரூ.840
இந்தியாவில் சாட்டிலைட் இணைய சேவைகளை துவங்க திட்டமிட்டுள்ள நிறுவனங்கள், அறிமுக சலுகையாக அளவில்லா டேட்டா திட்டங்களுக்கு, மாத கட்டணமாக 840 ரூபாய்க்கு குறைவாக நிர்ணயிக்க திட்டமிட்டு உள்ளன. நகரங்களில் மாதாந்திர பயனர் கட்டணம் 500 ரூபாய் என, டிராய் பரிந்துரை செய்துள்ளது.
8.25%
கடந்த நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி டிபாசிட்களுக்கு 8.25 சதவீதம்
வட்டி வழங்க, மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இ.பி.எப்.ஓ., கூட்டத்தில் பிப்ரவரியில் எடுத்த முடிவின்படி 7 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களின் கணக்குகளில், விரைவில் வட்டி வரவு வைக்கப்படவுள்ளது.