ADDED : ஜூன் 26, 2025 01:43 AM

புதிய பங்கு வெளியீட்டுக்கு ஆயத்தமாகி வரும் தேசிய பங்குச் சந்தை எனப்படும் என்.எஸ்.இ., சந்தை கட்டுப்பாட்டாளரான செபிக்கு, நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருந்த 1,388 கோடி ரூபாயை செலுத்தி இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் வரலாற்றில் செபிக்கு செலுத்தப்பட்ட மிகப்பெரிய தொகை இதுவாகும்.
கடந்த 2019ல் அனைத்து வர்த்தக உறுப்பினர்களுக்கும் சரிசமமான வாய்ப்பை அளிக்க தவறியதற்கு, என்.எஸ்.இ.,க்கு 1,100 கோடி ரூபாயை செபி அபராதம் விதித்துள்ளது நீதிமன்றத்துக்கு வெளியே இதற்கு தீர்வு காண பேச்சுநடைபெற்ற நிலையில், தற்போது அபராதத்தைஎன்.எஸ்.இ., செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.