ADDED : ஜூன் 28, 2025 01:17 AM

ரிசர்வ் வங்கியின் அரை சதவீத ரெப்போ வட்டி குறைப்பையடுத்து, பொருளாதார
வளர்ச்சிக்கு உதவும் துறைகளுக்கு, அதிகளவில் கடன் வழங்க வேண்டும் என, வங்கிகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தி உள்ளார்.
பொதுத்துறை வங்கிகள் நிதி செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர், குறைந்த செலவில் டிபாசிட்டுகளை ஈர்க்க நடவடிக்கை தேவை என்றும் தெரிவித்தார்.