இந்தியாவில் கால் பதிக்கிறது 'லிட்டில் சீசர்ஸ்'
இந்தியாவில் கால் பதிக்கிறது 'லிட்டில் சீசர்ஸ்'
இந்தியாவில் கால் பதிக்கிறது 'லிட்டில் சீசர்ஸ்'
ADDED : ஜூன் 09, 2025 12:44 AM

புதுடில்லி:அமெரிக்காவின் மிக்சிகனை சேர்ந்த பிரபல பீட்சா பிராண்டான 'லிட்டில் சீசர்ஸ்' இந்திய சந்தையில் நுழைய உள்ளது.
உலகளவில் மூன்றாவது மிகப்பெரிய பீட்ஸா தயாரிப்பாளராக திகழும் இந்நிறுவனம், நாட்டின் முதல் விற்பனை நிலையத்தை டில்லி என்.சி.ஆர்., பகுதியில் துவங்க திட்டமிட்டு உள்ளது.
தங்களது 30வது நாடாக இந்தியாவில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என, லிட்டில் சீசர்ஸ் தெரிவித்துள்ளது. ஐமார்க் குழுமத்தின் அறிக்கையின்படி, கடந்த 2024ல் இந்தியாவின் பீட்சா சந்தை மதிப்பு 45,000 கோடி ரூபாயை எட்டியிருந்தது.
தற்போது இந்திய பீட்சா சந்தையில், டோமினோஸ், பீட்சா ஹட் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், லிட்டில் சீசர்ஸ் போட்டியில் இணைய உள்ளது.