பயணியர் கார் விற்பனை மந்தம்; தடுமாறும் முன்னணி நிறுவனங்கள்
பயணியர் கார் விற்பனை மந்தம்; தடுமாறும் முன்னணி நிறுவனங்கள்
பயணியர் கார் விற்பனை மந்தம்; தடுமாறும் முன்னணி நிறுவனங்கள்
ADDED : ஜூன் 03, 2025 12:21 AM
சென்னை: மே மாத பயணியர் கார் விற்பனை, 0.11 சதவீதம் மட்டுமே உயர்ந்து, எந்த முன்னேற்றமும் இன்றி, அதே நிலையில் நீடிக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில், 3.35 லட்சம் கார்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு மே மாதத்தில், 3.36 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் நான்கு முன்னணி கார் தயாரிப்பாளர்களில், மூன்று நிறுவனங்கள் விற்பனையில் வீழ்ச்சி கண்டுள்ளன.
இதில், மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை மட்டுமே, 21.30 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மாருதி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும், உள்நாட்டு விற்பனையில் வீழ்ச்சி கண்டுஉள்ளன.