'பேடிஎம் வேலட்' வணிகத்தை வாங்குவதற்கு 'ஜியோ' முயற்சி
'பேடிஎம் வேலட்' வணிகத்தை வாங்குவதற்கு 'ஜியோ' முயற்சி
'பேடிஎம் வேலட்' வணிகத்தை வாங்குவதற்கு 'ஜியோ' முயற்சி
ADDED : பிப் 06, 2024 10:34 AM

புதுடில்லி: 'பேடிஎம்' நிறுவனத்தின் 'வேலட்' வணிகத்தை வாங்க, 'ஜியோ பைனான்சியல் சர்வீசஸ்' மற்றும் 'எச்.டி.எப்.சி.,' வங்கி ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான, 'ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ்' நிறுவனம், இந்த இரு நிறுவனங்களுடன் இது குறித்து பேச்சு நடத்தி வருவதாக செய்திகள் வெளியானதையடுத்து, பங்குச் சந்தையில், நேற்று ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகள் 15 சதவீதம் வரை அதிகரித்தது. எச்.டி.எப்.சி., வங்கியின் பங்கு விலையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை.
கடந்தாண்டு நவம்பர் மாதம் முதலே, ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்துடன் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும்; ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை எடுப்பதற்கு சற்று முன்பாகவே எச்.டி.எப்.சி., வங்கியுடன் இந்த பேச்சு துவங்கப்பட்டதாகவும், நிதி தொழில்நுட்பம் மற்றும் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகின்றன. ரிசர்வ் வங்கியின் உத்தரவை தொடர்ந்து, கடந்த மூன்று வர்த்தக நாட்களில், நிறுவனத்தின் பங்கு விலை, 42 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.
இந்த பேச்சு செயல்படுத்தப்படும் நிலையில், அது நாட்டின் நிதி தொழில்நுட்ப துறையில் ஒரு முக்கிய மறு சீரமைப்பை ஏற்படுத்தும் என்பதால், தொழில் துறையினர் இந்த முன்னேற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.