ADDED : மே 27, 2025 10:13 PM

உலகளவில் கடன் வழங்கும் நாடுகளில், தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த ஜப்பான், கடந்தாண்டு தன் அந்தஸ்தை இழந்து உள்ளது.
கடந்தாண்டு முடிவில், ஜப்பானின் நிகர வெளிநாட்டு சொத்து மதிப்பு, 533 டிரில்லியன் யென்னாக குறைந்தது.
ஆனால், ஜெர்மனி யின் நிகர வெளிநாட்டு சொத்து மதிப்பு 570 டிரில்லியன் யென்னாக அதிகரித்து, அந்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 1991ல் இருந்து முதலிடத்தில் இருந்த ஜப்பானின் நிகர வெளிநாட்டு சொத்து மதிப்பு, யென் மதிப்பு வீழ்ச்சி காரணமாக சரிந்துள்ளது.