இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் பாதுகாப்பு துறை பங்கு விலை விர்ர்
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் பாதுகாப்பு துறை பங்கு விலை விர்ர்
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் பாதுகாப்பு துறை பங்கு விலை விர்ர்
ADDED : ஜூன் 13, 2025 10:55 PM

புதுடில்லி:இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றத்தால், பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்ட போதிலும், பாதுகாப்புத் துறை பங்குகள் குறிப்பிடத்தக்க ஏற்றத்தை கண்டன.
ஐடியா போர்ஜ் டெக்னாலஜி நிறுவனத்தின் பங்குகள், மும்பை பங்குச் சந்தையில் 6.35 சதவீதம் வரை உயர்ந்து, பங்கு ஒன்றின் விலை 590 ரூபாயாக இருந்தது.
இதேபோன்று பாரத் டைனமிக்ஸ் பங்கு விலை 1.59 சதவீதம் உயர்ந்து, 1,899.95 ரூபாயாக அதிகரித்திருந்தது. மேலும், கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் பங்குகள் 3.06 சதவீதமும்; ஜென் டெக்னாலஜிஸ் மற்றும் கொச்சின் ஷிப் யார்டு ஆகியவற்றின் பங்குகள் 2 முதல் 4 சதவீதம் வரையும் உயர்வு கண்டன.
பராஸ் டிபென்ஸ், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிற பாதுகாப்புத் துறை நிறுவனங்களின் பங்குகளும் 1-3 சதவீதம் வரை உயர்ந்தன.
போர் பதற்ற சூழல்கள் பாதுகாப்புத் துறையை சேர்ந்த நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் பங்குகள் விலை ஏற்றம் கண்டு வருவதாக கூறப்படுகிறது.