இந்தியாவில் தயாரான ஐபோன்கள் 97 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி
இந்தியாவில் தயாரான ஐபோன்கள் 97 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி
இந்தியாவில் தயாரான ஐபோன்கள் 97 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி
ADDED : ஜூன் 13, 2025 10:58 PM

புதுடில்லி:பாக்ஸ்கான் நிறுவனம் கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்த ஐபோன்களில் 97 சதவீதம் அமெரிக்காவுக்கே அனுப்பப்பட்டுள்ளன.
சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிபர் டிரம்ப் அதிக வரி விதித்துள்ளதை தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பாக்ஸ்கான்
ஆப்பிள் ஐபோன்களின் மிகப்பெரிய தயாரிப்பாளர் பாக்ஸ்கான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களில் பாக்ஸ்கான் நிறுவனம், இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட 27,200 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபோன்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் 97 சதவீதம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்தாண்டின் இதே காலத்தில் 50.30 சதவீத ஐபோன்கள் மட்டுமே அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது. டிரம்பின் வரி விதிப்புக்கு முன், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்கள் நெதர்லாந்து, செக் குடியரசு மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
வலியுறுத்தல்
இந்நிலையில், சமீபகாலமாக பிரத்யேகமாக அமெரிக்காவுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவில் ஐபோன் தயாரிப்பு விரிவாக்கத்தை நிறுத்தி, அமெரிக்காவில் ஆலை அமைக்க ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கை டிரம்ப் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
மே, 2025ரூ.8,500 கோடி
2025 (ஜன., - மே)ரூ.37,400 கோடி
2024 மொத்த ஏற்றுமதிரூ.31,450 கோடி