பங்கு சார்ந்த பண்டுகள் மே மாத முதலீடு 22 சதவிகிதம் சரிவு
பங்கு சார்ந்த பண்டுகள் மே மாத முதலீடு 22 சதவிகிதம் சரிவு
பங்கு சார்ந்த பண்டுகள் மே மாத முதலீடு 22 சதவிகிதம் சரிவு
ADDED : ஜூன் 11, 2025 01:01 AM

புதுடில்லி:பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு முதலீடுகள், கடந்த மே மாதத்தில் 22 சதவீதம் சரிந்துள்ளதாக, இந்திய மியூச்சுவல் பண்டுகள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஐந்தாவது மாதமாக முதலீடுகள் குறைந்துள்ளன.
கடந்த மே மாதத்தில், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டுகளில் 19,013 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்தின் 24,269 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், 21.66 சதவீதம் குறைவு. கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துக்கு பின் இதுவே குறைவான முதலீடாகும்.
முதலீட்டாளர்கள் லாபம் ஈட்ட விரும்பியது, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் உள்ளிட்டவை, முதலீடு குறைய காரணமாக கூறப்படுகிறது.
கடன் பண்டு முதலீடுகளை பொறுத்தவரை, கடந்த மாதம் 15,908 கோடி ரூபாய் முதலீடு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில் இப்பிரிவில் 2.20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது.
எனினும் மியூச்சுவல் பண்டு எஸ்.ஐ.பி., முதலீடுகள் வளர்ச்சி பாதையில் தொடர்கின்றன. ஏப்ரலில் 26,632 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில், மே மாதத்தில் 26,688 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
ஒட்டுமொத்தமாக கடந்த மாத முதலீடுகளோடு சேர்த்து, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, 72.20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.