மாநிலங்களின் செலவினங்கள் அதிகரிப்பு
மாநிலங்களின் செலவினங்கள் அதிகரிப்பு
மாநிலங்களின் செலவினங்கள் அதிகரிப்பு
ADDED : செப் 22, 2025 01:48 AM

புதுடில்லி:மாநிலங்களின் செலவினங்கள் குறித்து, இந்திய கணக்கு மற்றும் தணிக்கை கட்டுப்பாட்டாளர் அலுவலக அறிக்கை வெளியாகி உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மாநிலங்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டி செலுத்துதல்கள், அதாவது, 'கட்டாயச் செலவினங்கள்' இரண்டரை மடங்கு உயர்ந்துள்ளன.
கட்டாயச் செலவினங்களில், சம்பளம் மிகப்பெரிய பங்காக உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில், ஓய்வூதியத்தை விட, வட்டிச் செலுத்துதல் அதிகமாக உள்ளது, இது இந்த மாநிலங்களின் கடன் சுமையைக் காட்டுகிறது.