Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ கிரிப்டோ வருவாயை மறைத்தால் வருமான வரித்துறை நோட்டீஸ்

கிரிப்டோ வருவாயை மறைத்தால் வருமான வரித்துறை நோட்டீஸ்

கிரிப்டோ வருவாயை மறைத்தால் வருமான வரித்துறை நோட்டீஸ்

கிரிப்டோ வருவாயை மறைத்தால் வருமான வரித்துறை நோட்டீஸ்

ADDED : ஜூன் 23, 2025 12:32 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி:கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளுக்கு முறையாக வரி செலுத்தாதவர்கள் மற்றும் இதுகுறித்து வருமான வரி தாக்கலின் போது உரிய தகவல் வழங்காதவர்களுக்கு வரித்துறை நோட்டீஸ் அனுப்பிஉள்ளது.

வெளிநாட்டு கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளங்களை பயன்படுத்துபவர்கள், வரி தாக்கலின் போது வி.டி.ஏ., எனும் மெய்நிகர் டிஜிட்டல் சொத்து படிவத்தையும்; எப்.ஏ., எனும் வெளிநாட்டு சொத்து படிவத்தையும் தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதை கடைப்பிடிக்காதவர்கள் வருமான வரி சோதனைக்கு உட்படுத்தப் படுகின்றனர்.

சமர்ப்பிக்க வேண்டும்


ஒவ்வொரு கிரிப்டோகரன்சி பயனரும், மெய்நிகர் டிஜிட்டல் சொத்து படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதில், கிரிப்டோவை விற்காமல், சேமித்து வைத்திருந்தாலும், கிரிப்டோபில் இழப்பு ஏற்பட்டிருந்தாலும் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.

கிரிப்டோ வைத்திருப்பவர்கள் தன் முதலீட்டின் ஆதாரம், தொடர்புடைய நபர்கள் மற்றும் வாங்கிய முறை ஆகியவற்றை நிரூபிக்க வேண்டும்.

இதைச்செய்ய தவறியவர்களிடம் வருமான வரித்துறை சோதனையிடும்போது, பரிவர்த்தனைக்காக பயன்படுத்திய வன்பொருள் வாலட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படலாம். பறிமுதல் செய்யப்பட்ட வாலட்டுகளில் வெளிநாட்டு தளங்களில் இருந்து பெற்ற கிரிப்டோ சேமித்து வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது அதுகுறித்து தகவல் தெரிவிக்கபடாமல் இருந்தாலோ, கருப்பு பணச்சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும்.

நோட்டீஸ்


இதனடிப்படையில், இந்திய பரிவர்த்தனை தளங்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு தளங்கள் வாயிலாகவும் மேற்கொண்ட பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களை வருமான வரித்துறை சேகரித்துள்ளதையடுத்து, இது தொடர்புடைய நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதுடன், சிலருடைய கிரிப்டோ வாலட் வன்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆகையால், நோட்டீஸ் பெற்றவர்கள், தங்கள் வருமான வரிக் கணக்குகளை சரிபார்த்து, முழுமையான பரிவர்த்தனை விபரங்களை சேகரித்து, வரித்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us