61 சதவிகிதம் பங்கு விற்பனை வாயிலாக ஐ.டி.பி.ஐ., வங்கி தனியார்மயம்
61 சதவிகிதம் பங்கு விற்பனை வாயிலாக ஐ.டி.பி.ஐ., வங்கி தனியார்மயம்
61 சதவிகிதம் பங்கு விற்பனை வாயிலாக ஐ.டி.பி.ஐ., வங்கி தனியார்மயம்
ADDED : ஜூன் 26, 2025 01:40 AM

ஐ.டி.பி.ஐ., வங்கியில் எல்.ஐ.சி.,க்கு உள்ள பங்குகளையும் சேர்த்து, மத்திய அரசு பெரும்பகுதியை இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனை செய்வதன் வாயிலாக, நடப்பு நிதியாண்டின் பங்கு விலக்கல் இலக்கான 47,000 கோடி ரூபாயை எட்டும் எனத் தெரிகிறது.
ஐ.டி.பி.ஐ., வங்கியில் அரசு மற்றும் எல்.ஐ.சி.,க்கு 95 சதவீத பங்குகள் உள்ள நிலையில், அதில் 60.72 சதவீதத்தை விற்பதன் வாயிலாக, ஐ.டி.பி.ஐ., தனியார்மயமாக்கப்பட உள்ளது. எல்.ஐ.சி., நிறுவனத்தில் ஏற்கனவே 2022ல் 3.50 சதவீதத்தை விலக்கிக் கொண்ட மத்திய அரசு, 2027 மே மாதத்துக்குள் மேலும் 6.50 சதவீத பங்குகளை விற்று, கிட்டத்தட்ட 35,256 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.