வருமான வரி சலுகை பற்றிய எதிர்பார்ப்பு
வருமான வரி சலுகை பற்றிய எதிர்பார்ப்பு
வருமான வரி சலுகை பற்றிய எதிர்பார்ப்பு
ADDED : ஜன 08, 2024 12:43 AM

வருமான வரி செலுத்துபவரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதில் வருமான வரித்துறை கவனம் செலுத்தி வரும் நிலையில், வரும் பட்ஜெட்டில் வருமான வரி விகிதம் தொடர்பான சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும் எனும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக, வருமான வரித்துறை அண்மையில் எக்ஸ் தளம் வாயிலாக தெரிவித்திருந்தது.
முந்தைய ஆண்டோடு ஒப்பிடும் போது கடந்த ஆண்டு வரிக்கணக்கு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை, 7.52 கோடியில் இருந்து 8 கோடியாக அதிகரித்துள்ளது.
இதனிடையே, கடந்த ஆண்டு வரி தாக்கல் செய்தவர்களில், 60 சதவீதம் பேர் வரித் தாக்கலுக்கான புதிய முறையை நாடியதாகவும் தெரிய வந்துள்ளது. வழக்கமான கழிவுகள் பொருந்தாது என்றாலும், புதிய முறை பல்வேறு சாதகங்கள் கொண்டு உள்ளதாக கருதப்படுகிறது.
இந்த முறை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால், தேவையெனில் பழைய முறையை தேர்வு செய்ய வேண்டும்.
இந்நிலையில், வரும் பட்ஜெட்டில் வருமான வரி தாக்கலை மேலும் ஊக்குவிக்கும் வகையில் வரி விகிதம் தொடர்பாக கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும் எனும் எதிர்பார்ப்பு நிலவுவதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.