அடுக்குமாடி தொழிற்கூடம் விற்கும் 'சிட்கோ' நிறுவனம்
அடுக்குமாடி தொழிற்கூடம் விற்கும் 'சிட்கோ' நிறுவனம்
அடுக்குமாடி தொழிற்கூடம் விற்கும் 'சிட்கோ' நிறுவனம்
ADDED : பிப் 24, 2024 01:41 AM

சென்னை,:தமிழக அரசின், 'சிட்கோ' எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறுவதற்காக, தொழிற்பேட்டைகளை அமைக்கிறது.
இதுதவிர, நிறுவனங்களின் முதலீட்டு செலவை குறைப்பதுடன், உடனே தொழில் துவக்க தேவையான அனைத்து வசதிகளுடன் அடுக்குமாடி தொழில் வளாகங்களையும் கட்டுகிறது.
அதன்படி, சென்னை, கிண்டி தொழிற்பேட்டையில், 1.97 லட்சம் சதுர அடி யில், ஆறு தளங்களுடன் தொழில் வளாகம் கட்டப் பட்டு உள்ளது. அம்பத்துாரில், 1.31 லட்சம் சதுர அடி யில் நான்கு தளங்களுடன் தொழில் வளாகம் கட்டப்பட்டுள்ளது. அவற்றை தொழில்முனைவோர்களுக்கு விற்கும் பணியில், சிட்கோ ஈடுபட்டுள்ளது.
கிண்டி தொழில் வளாக மனையின் சதுர அடி விலை, 7,360 ரூபாயாகவும்; அம்பத்துாரில் கட்டப்பட்டு உள்ள தொழில் வளாக மனை யின் சதுர அடி விலை, 6,630 ரூபாயாகவும் உள்ளது.
அம்பத்துார், கிண்டி அடுக்குமாடி தொழில் வளாகங்களை, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, இன்று துவக்கி வைக்கிறார்.