சமையல் எண்ணெய் விலையை குறைக்க மத்திய அரசு வேண்டுகோள்
சமையல் எண்ணெய் விலையை குறைக்க மத்திய அரசு வேண்டுகோள்
சமையல் எண்ணெய் விலையை குறைக்க மத்திய அரசு வேண்டுகோள்
ADDED : ஜன 25, 2024 12:34 AM

புனே:சமையல் எண்ணெய்களின் விலையை குறைக்குமாறு, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு, மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சர்வதேச விலை வீழ்ச்சிக்கு ஏற்ப, சமையல் எண்ணெய்களின் விலைகளை உற்பத்தி நிறுவனங்கள் குறைக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
ஆனால், எண்ணெய் உற்பத்தியாளர்கள் உடனடி விலை குறைப்பிற்கு சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில் எண்ணெய் விலை குறையும் அளவிற்கு, சோயாபீன், சூரியகாந்தி மற்றும் பாமாயில் போன்ற எண்ணெய்களின் குறைந்தபட்ச சில்லரை விலையை குறைக்கவில்லை என்று சமையல் எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்திடம் மத்திய அரசு கூறியதாக, சங்கத்தின் தலைவர் அஜய் ஜூன்ஜூன்வாலா சங்க உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த தொழில்துறையினர், விலையை உடனடியாக குறைக்க வாய்ப்பு இல்லை என்றதுடன், கடுகு அறுவடை துவங்கும் மார்ச் மாதம் வரை சில்லரை விற்பனை விலை குறைப்பு செய்வது சாத்தியமில்லை என்று தெரிவித்தனர்.
மேலும், 3 முதல் 4 சதவீதம் மட்டுமே விலை குறைப்பு செய்ய முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த பார்சூன் சமையல் எண்ணெய் உற்பத்தியாளரான வில்மர் அதானி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அங்சூ மல்லிக் கூறியதாவது:
சமையல் எண்ணெய் விலை நிலையாக உள்ளது. சர்வதேச பொருட்களின் விலைகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம்.
தற்போதைய விலைகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் சில்லரை விற்பனை விலை சரி செய்யப்படுகிறது. விலையில் உடனடி திருத்தத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
உடனடி விலை குறைப்புக்கு வாய்ப்பில்லை
மார்ச் மாத கடுகு அறுவடைக்கு பின் குறையலாம்
அதிகபட்சம் 3 -4 சதவீதம் குறையலாம்