'சியட்' ஆலை ரூ.550 கோடியில் விரிவாக்கம்
'சியட்' ஆலை ரூ.550 கோடியில் விரிவாக்கம்
'சியட்' ஆலை ரூ.550 கோடியில் விரிவாக்கம்
ADDED : மே 10, 2025 12:25 AM

சென்னை:'சியட்' நிறுவனம், வாகனங்களுக்கான டயர் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகில் தொழிற்சாலை உள்ளது.
இந்த ஆலையை, 550 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக கூடுதலாக, 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.