வோல்டாஸ் நிறுவனத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
வோல்டாஸ் நிறுவனத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
வோல்டாஸ் நிறுவனத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
ADDED : டிச 01, 2025 12:41 AM
புதுடில்லி: டாடா குழுமத்தைச் சேர்ந்த வோல்டாஸ் நிறுவனத்தை திவாலானதாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துள்ளது.
'ஏர் வேவ் டெக்னோகிராப்ட்ஸ்' எனும் நிறுவனம், வோல்டாஸ் தனக்கு 1.20 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதாகக் கூறி வழக்கு தொடர்ந்தது.
பணம் கொடுப்பதில் இரு நிறுவனங்களுக்கும் இடையே முன்பே கருத்து வேறுபாடு உள்ளது தெரிய வந்துள்ளதாகவும், ஏற்கனவே பிரச்னை இருக்கும்போது ஒரு நிறுவனத்தை திவாலானதாக அறிவிக்க முடியாது என்றும் கூறி, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை தள்ளுபடி செய்தது.


