வங்கிகளின் கமிஷன் 15 சதவீதம் அதிகரிப்பு
வங்கிகளின் கமிஷன் 15 சதவீதம் அதிகரிப்பு
வங்கிகளின் கமிஷன் 15 சதவீதம் அதிகரிப்பு
ADDED : ஜூன் 13, 2025 10:40 PM

புதுடில்லி:காப்பீடு, மியூச்சுவல் பண்டு விற்பனை வாயிலாக, பொதுத்துறை வங்கிகள், கடந்த நிதியாண்டில் 15 சதவீதம் அளவுக்கு அதிக கமிஷன் ஈட்டியுள்ளன.
பொதுத்துறை வங்கிகளின் வட்டியில்லாத பிற வருவாய் அதிகரித்து வருவது நல்ல முன்னேற்றமாகவே பார்க்கப்படுகிறது. எனினும், வாடிக்கையாளருக்கு பொருந்தாத காப்பீடு திட்டங்கள், மியூச்சுவல் பண்டு திட்டங்களை விற்பனை செய்வதாக பொதுத்துறை வங்கிகளின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், ரிசர்வ் வங்கி கவர்னரும் வங்கி உயர் அதிகாரிகளை எச்சரித்துள்ளனர்.