ADDED : ஜூன் 11, 2025 11:49 PM

புதுடில்லி,:வாகன தயாரிப்புக்கு தேவைப்படும் காந்தத்தை ஏற்றுமதி செய்வதற்கு சீனா தடை விதித்துள்ள நிலையில், இந்தியாவிலிருந்து வாகனத் துறையை சேர்ந்த பிரதிநிதிகள் குழு, சீனா செல்ல திட்டமிட்டுள்ளது.
இதற்காக 40-50 நிறுவனங்களின் அதிகாரிகள் விசா பெற்றுள்ளனர். இருப்பினும், சீன வர்த்தக அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.
கடந்த நிதியாண்டில், இந்தியா தனது 540 டன் காந்த இறக்குமதியில், 80 சதவீதத்திற்கும் அதிகமாக சீனாவிலிருந்து பெற்றது. கடந்த மாத நிலவரப்படி, இந்திய நிறுவனங்களின் 30 இறக்குமதி கோரிக்கைகளுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துஉள்ளது.
ஆனால், அவை சீன அதிகாரிகளால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.