ஏர் இந்தியாவுக்கு ரூ.1.10 கோடி அபராதம்
ஏர் இந்தியாவுக்கு ரூ.1.10 கோடி அபராதம்
ஏர் இந்தியாவுக்கு ரூ.1.10 கோடி அபராதம்
ADDED : ஜன 25, 2024 12:26 AM

புதுடில்லி:பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்காததற்காக, 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு 1.10 கோடி ரூபாய் அபராதத்தை, விமான போக்குவரத்து இயக்குனரகம் விதித்துள்ளது.
ஏர் இந்தியா அதன் சில நீண்ட துார, முக்கியமான வழித்தடங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக, விமான ஊழியர் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை நடத்தியது.
விசாரணையில், விமான நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்பது தெரிய வந்ததை அடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர் இதற்கான பதில் அறிக்கை மதிப்பிடப்பட்டது.
முடிவில், நிறுவனத்தின் செயல்பாடுகள் ஒழுங்குமுறை செயல்திறன் வரம்புகளுக்கு இணங்கவில்லை என்று தெரிந்ததை அடுத்து, விமான போக்குவரத்து இயக்குனரகம், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அபராதம் விதித்தது. அத்துடன் அமலாக்க நடவடிக்கையும் தொடங்கியது.
இதே காரணத்துக்காக, 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனத்துக்கும் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.