விவசாய உதவித்தொகை 28ல் வழங்கப்படுகிறது
விவசாய உதவித்தொகை 28ல் வழங்கப்படுகிறது
விவசாய உதவித்தொகை 28ல் வழங்கப்படுகிறது
ADDED : பிப் 24, 2024 08:57 PM

புதுடில்லி:பிரதமரின், 'கிசான் சம்மன் நிதி யோஜனா' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவியின் 16வது தவணை, இம்மாதம் 28ம் தேதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா என்பது, வறிய விவசாயிகளுக்கு நிதியுதவி மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்க பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், 2,000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
சாகுபடி விவசாய நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்களாவர். வருமான வரி கட்டுவோர் இத்திட்டத்தில் இணைய வாய்ப்பில்லை. இந்நிலையில், தற்போது 16வது தவணையாக வழங்கப்பட உள்ள இந்த உதவித்தொகை இம்மாத இறுதியில், அதாவது வருகிற 28ம் தேதி, தகுதியான பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.