ADDED : செப் 21, 2025 09:47 PM

இந்திய பங்கு சந்தை கடந்த வாரம் இறங்கு முகத்துடன் முடிந்தது. தொடர்ந்து மூன்று நாள் ஏறுமுகத்திற்கு பின், வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 388 பங்குகள் குறைந்து, 82,626 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 97 புள்ளிகள் குறைந்து, 25,327 புள்ளிகளாக இருந்தது.
முதலீட்டாளர்கள் முன்னணி பங்குகளில் லாபம் பார்த்தலில் ஈடுபட்டனர். பங்கு சந்தை முறைகேடுகள் தொடர்பான விசாரணையில் செபியின் சாதகமான உத்தரவை அடுத்து, அதானி குழும பங்குகள் ஏற்றம் கண்டன. வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.
ஏறுமுகம் கண்ட பங்குகள்
1. அதானி போர்ட்ஸ்- 1,427.75 (1.09)
2. பார்தி ஏர்டெல்- 1,962.35 (1.05)
3. எஸ்.பி.ஐ.,- 862.25 (0.91)
இறங்குமுகம் கண்ட பங்குகள்
1. எச்.சி.எல்., டெக்- 1,467.40 (1.76)
2. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி -1,403.15 (1.32)
3. டிரெண்ட்- 5,079.45 (1.26)