'வெல்டன் இந்தியா' : குவியும் பாராட்டு
'வெல்டன் இந்தியா' : குவியும் பாராட்டு
'வெல்டன் இந்தியா' : குவியும் பாராட்டு
ADDED : ஜூன் 01, 2024 07:08 AM

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த நிதியாண்டில் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பையும் விஞ்சி, 8.20 சதவீதமாக உயர்வைக் கண்டதை அடுத்து, பலரும் பாராட்டுகளை வாரி வழங்கி வருகின்றனர்.
உலகின் முக்கிய பொருளாதாரங்களிலேயே, இந்தியா தான் அதிகபட்ச வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அடுத்த ஆட்சியிலும் இந்த வளர்ச்சிப் பயணம் தொடரும். கடந்த நிதியாண்டில் 9.90 சதவீதமாக இருந்த தயாரிப்பு துறையின் வளர்ச்சி, இத்துறையில் அரசு மேற்கொண்ட முன்னெடுப்பு களின் வெற்றியை பிரதிபலிக்கிறது.
- நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர்
வெல்டன் இந்தியா. அனைத்து கணிப்புகளையும் கடந்து 8.20 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, ஏழு சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியை பதிவு செய்து, அனைத்து பெரிய பொருளாதாரங்களையும் விஞ்சியுள்ளது.
- ராஜீவ் குமார்
முன்னாள் துணை தலைவர், நிடி ஆயோக்
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மீண்டும் அனைவரது எதிர்பார்ப்பையும் கடந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மீண்டும் உலகின் முக்கிய பொருளாதாரங்களிலேயே அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது
- ஷமிகா ரவி
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர்
பொருளாதார வளர்ச்சி 8.00 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், 8.20 சதவீதமாக அதிகரித்துள்ளது இந்தியாவுக்கு சிறப்பான செய்தி.
- அரவிந்த் பனகாரியா
16வது நிதி குழு தலைவர்
தயாரிப்புத் துறையின் சிறப்பான செயல்பாட்டின் பின்னணியில், நாட்டின் பொருளாதாரம் அனைவரது எதிர்பார்ப்பையும் கடந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நடப்பு நிதியாண்டிலும் தயாரிப்பு துறையின் செயல்பாடுகள் அவ்வாறே தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.
- தீபக் சூட்
பொதுச் செயலர், 'அசோசெம்'