உலக உயிரி எரிபொருள் கூட்டமைப்பு தலைமையகம் இந்தியாவில் அமைகிறது
உலக உயிரி எரிபொருள் கூட்டமைப்பு தலைமையகம் இந்தியாவில் அமைகிறது
உலக உயிரி எரிபொருள் கூட்டமைப்பு தலைமையகம் இந்தியாவில் அமைகிறது
ADDED : ஜூலை 19, 2024 12:08 AM

புதுடில்லி:ஜி.பி.ஏ., எனும் 'உலக உயிரி எரிபொருள் கூட்டமைப்பு' உடன், இந்தியா, தலைமையக ஒப்பந்தத்தை விரைவில் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.இதையடுத்து, இக்கூட்டமைப்பு சட்ட ரீதியான அங்கீகாரம் பெறவுள்ளது.
கடந்தாண்டு ஜி - 20 அமைப்பின் உறுப்பு நாடுகள் இணைந்து, ஜி.பி.ஏ., அமைப்பை துவங்கியது. ஜி-20 அமைப்புக்கு தலைமை வகித்த இந்தியா தான், கடந்த செப்டம்பர் மாதத்தில் அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து, உலக உயிரி எரிபொருள் கூட்டமைப்பை துவங்கும் முயற்சியில் முன் நின்றது.
இந்நிலையில், தற்போது இந்த கூட்டமைப்புக்கான தலைமையக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு, அதன் வாயிலாக, இந்த அமைப்புக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்க இருக்கிறது.
இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு, ஜி.பி.ஏ., தன்னாட்சி அங்கீகாரமும் பெறும். மேலும், உலகஅளவில் அதன் செயல்பாடுகளை எளிதாக விரிவுபடுத்தவும் முடியும்.
ஒரு கூட்டமைப்பு, எந்த நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறதோ, அந்நாட்டுடன் தலைமையக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
இதுவே, அந்த அமைப்புக்கு, ஓர் உலக அமைப்புக்கான சலுகைகளை வழங் கும். உயிரி எரிபொருள் விஷயத்திலும், இதுதொடர்பான செயல்முறைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
விரைவில், மத்திய வெளியுறவுத்துறைக்கும், ஜி.பி.ஏ., அமைப்புக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். இதன் பிறகு, இதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்படும்.
ஜி.பி.ஏ., உலகளவில், உயிரி எரிபொருளின் பெரிய நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர் நாடுகளை ஒன்றிணைக்கும் விதமாக தொடங்கப்பட்டது.
வரும் 2030ம் ஆண்டுக்குள் அடைய வேண்டிய நிகர பூஜ்ஜிய கார்பன் இலக்கை கருத்தில்கொண்டு, கச்சா எண்ணெய் பயன்பாட்டை குறைத்து, அதற்கு மாற்றாக உயிரி எரிபொருளின் பயன்பாட்டை அதிகரிப்பதை, இக்கூட்டமைப்பு நோக்கமாக கொண்டுஉள்ளது.