நார்ட்டன் பிராண்டில் ரூ.2,172 கோடி டி.வி.எஸ்., மோட்டார் முதலீடு
நார்ட்டன் பிராண்டில் ரூ.2,172 கோடி டி.வி.எஸ்., மோட்டார் முதலீடு
நார்ட்டன் பிராண்டில் ரூ.2,172 கோடி டி.வி.எஸ்., மோட்டார் முதலீடு
ADDED : ஜூலை 19, 2024 12:06 AM

பெங்களூரு:'டி.வி.எஸ்., மோட்டார்' நிறுவனம், அதன் 'நார்ட்டன் மோட்டார் சைக்கிள்ஸ்' பிராண்டில், 2,172 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
புதிய வாகன தயாரிப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகத் தரம் வாய்ந்த பொறியியல் ஆகியவற்றை உலக அளவில் விரிவாக்கம் செய்ய, இந்த முதலீடு செய்யப்படுகிறது.
குறிப்பாக, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளது. அது மட்டுமின்றி, அடுத்த மூன்று ஆண்டுகளில், ஆறு புதிய மோட்டார் சைக்கிள்களை நார்ட்டன் பிராண்டு அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
நார்ட்டன் பிராண்டின் செயல் இயக்குனராக ரிச்சர்ட் அர்னால்டு, நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ராபர்ட் ஹென்ஷெல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக டி.வி.எஸ்., நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுதர்ஷன் வேணு அறிவித்துஉள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த நார்ட்டன் பிராண்டை, 2020ம் ஆண்டில் 1,085 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியது டி.வி.எஸ்., நிறுவனம்.