Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

ADDED : மார் 13, 2025 12:58 AM


Google News
Latest Tamil News
26



சதவீதம் சரிந்து 29,303 கோடி ரூபாயாக பிப்ரவரி மாத மியூச்சுவல் பண்டு முதலீடுகள் இருந்தன. கடந்த மாதம,் குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர பிரிவு நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் கணிசமாக குறைந்தன. பங்குச் சந்தை வலுவிழந்து காணப்படுவதால் தொடர்ந்து இரண்டாவது மாதமாக மியூச்சுவல் பண்டு முதலீடுகள் சரிந்துள்ளன.

36,000

கோடி ரூபாய் மதிப்பில், மும்பையின் மோதிலால் நகரை புனரமைக்க உள்ளது அதானி குழுமம். இதற்கான ஏலத்தில் எல் அண்டு டி., நிறுவனத்தை வீழ்த்தி அதானி குழுமம் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே, ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றான மும்பையின் தாராவியையும் அதானி குழுமம் தான் புனரமைத்து வருகிறது.

8,719

கோடி ரூபாய் மதிப்பிலான ஹல்திராம் நிறுவன பங்குகளை, சிங்கப்பூர் அரசின் முதலீட்டு நிறுவனமான டெமாசெக் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இனிப்புகள், தின்பண்டங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹல்திராமில் குறிப்பிட்ட சதவீத பங்குகளை டெமாசெக் வாங்கி உள்ளதாக தெரிகிறது.

24.71

கோடி ரூபாய் மதிப்பில், 144 நடு ரக வாகனங்களை கொள்முதல் செய்ய ராணுவ அமைச்சகம், ஜப்பானைச் சேர்ந்த 'எஸ்.எம்.எல்., இசுசூ' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 4 - வீல் டிரைவ் அமைப்பு கொண்ட இந்த வாகனத்தில், 20 பேர் வரை பயணிக்க முடியும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us