மின் வாகன ஊக்குவிப்பு திட்டம் காலவரம்பை நீட்டித்தது அரசு
மின் வாகன ஊக்குவிப்பு திட்டம் காலவரம்பை நீட்டித்தது அரசு
மின் வாகன ஊக்குவிப்பு திட்டம் காலவரம்பை நீட்டித்தது அரசு
ADDED : ஜூலை 29, 2024 01:02 AM

புதுடில்லி:மத்திய அரசு, மின்சார வாகன ஊக்குவிப்பு திட் டத்தை, வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை நீட்டித்துள்ளது. மேலும் திட்டச் செலவையும் 778 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகம், கடந்த மார்ச் மாதம் இ.எம்.பி.எஸ்., எனும் மின்சார வாகன ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இத்திட்டம், 500 கோடி ரூபாய் மதிப்பில் அறிவிக்கப்பட்டு நடப்பாண்டு ஏப்ரல் முதல், ஜூலை மாதம் வரை செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது இத்திட்டத்தை செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பதாக அரசு அறிவித்துஉள்ளது.
மொத்தம் 5.61 லட்சம் இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்களுக்கு இத்திட்டத்தின் பலன்களை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், புதுமையான பேட்டரிகள் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்ட வாகனங்களுக்கு மட்டுமே, ஊக்கத்தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.