பயன்படுத்தாத டேட்டாவுக்கும் கட்டணம் 'ரீசார்ஜ்' திட்டங்கள் குறித்து ஆலோசனை
பயன்படுத்தாத டேட்டாவுக்கும் கட்டணம் 'ரீசார்ஜ்' திட்டங்கள் குறித்து ஆலோசனை
பயன்படுத்தாத டேட்டாவுக்கும் கட்டணம் 'ரீசார்ஜ்' திட்டங்கள் குறித்து ஆலோசனை
ADDED : ஜூலை 29, 2024 01:07 AM

புதுடில்லி::நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், அழைப்பு, டேட்டா மற்றும் எஸ்.எம்.எஸ்., சேவைகளுக்கு, தனித்தனியே ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வருமாறு தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு, மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 'டிராய்' பரிந்துரைத்து உள்ளது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 112 கோடி மொபைல் போன் சந்தாதாரர்கள் உள்ளனர். இவர்களில் 65.90 கோடி பேர், ஸ்மார்ட்போன் பயனர்களாக உள்ளனர்.
ஸ்மார்ட்போன் அல்லாத பிற சாதாரண போன்களை பயன்படுத்தும் சந்தாதாரர்கள் பலர், தாங்கள் பயன்படுத்தாத டேட்டா சேவைகளுக்கும் கட்டணம் செலுத்துவதாக புகார் கூறி வந்தனர்.
இதுகுறித்து, டிராய் வெளியிட்டுள்ள ஆலோசனை குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தற்போது பயன்பாட்டில் உள்ள ரீசார்ஜ் திட்டங்களுடன், அழைப்பு, டேட்டா மற்றும் எஸ்.எம்.எஸ்., ஆகிய சேவைகளுக்கு, தனித்தனியே மற்றும் ஒருங்கிணைந்த புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வருவது அவசியம்.
தற்போது பயன்பாட்டில் உள்ள ரீசார்ஜ் திட்டங்கள், சரியான கட்டண திட்டத்தை தேர்ந்தெடுப்பதில் தடையாக இருப்பதாக சந்தாதாரர்கள் கருதுகின்றனர்.
மேலும், சிறப்பு கட்டண திட்டங்கள் மற்றும் 'காம்போ ரீசார்ஜ்' திட்டங்கள் போன்றவற்றின் செல்லுபடியாகும் காலத்தை, தற்போதுள்ள 90 நாட்கள் என்பதிலிருந்து, அதிகரிக்க வேண்டும்.
புதிய மாற்றங்கள் அவசியமென கருதுவோர், ஆகஸ்ட் 16ம் தேதிக்குள்ளாகவும்; மாற்றங்கள் தேவையில்லை என கருதுவோர், ஆகஸ்ட் 23 தேதிக்குள்ளாகவும் தங்கள் கருத்துகளை, டிராய் இணையதள முகவரிக்கு அனுப்பலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண போன்களை பயன்படுத்தும் சந்தாதாரர்கள் பலர், தாங்கள் பயன்படுத்தாத டேட்டா சேவைகளுக்கும் கட்டணம் செலுத்துகின்றனர்