தனி பிராண்டாகிறது டாடாவின் 'அவின்யா'
தனி பிராண்டாகிறது டாடாவின் 'அவின்யா'
தனி பிராண்டாகிறது டாடாவின் 'அவின்யா'
ADDED : ஜூன் 10, 2024 11:30 PM

புனே: 'ஆட்டோ எக்ஸ்போ 2023'ல் அறிமுகப்படுத்தப்பட்ட, புரோட்டோ டைப் மின்சார காரான 'அவின்யா', டாடாவின் பிரீமியம் மின்சார காராக மட்டும் இல்லாமல், தனிப்பெரும் மின்சார எஸ்.யு.வி., பிராண்டாக உருவாக்க உள்ளதாக, டாடாவின் பயணியர் மின்சார வாகன பிரிவின் தலைமை வர்த்தக அதிகாரி விவேக் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
அவின்யா பிராண்டின் கீழ், பல கார்களை வரிசைகட்ட உள்ளோம். குறிப்பாக, வித்தியாசமான வடிவில் எஸ்.யு.வி., மற்றும் எம்.பி.வி., கார்களே இதில் பெரும்பாலும் இடம்பெறும். இந்த பிராண்டு கார்கள், முழுமையான மின்சார கார்களாகவும், டாடாவின் மூன்றாம் தலைமுறை இ.வி., தயாரிப்பு தளத்திலும் தயாரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டாடா மற்றும் அவின்யா பிராண்டுகள், 'டொயோட்டா, லெக்சஸ்' போல தனித்தனி பிராண்டுகளாக செயல்படுமா என்பதில் இன்னும் தெளிவில்லை.
இருப்பினும், இந்த அவின்யா கார்கள் அனைத்தும், 9,000 கோடி முதலீட்டில், தமிழகத்தின் ராணிபேட்டையில் கட்டமைக்க உள்ள டாடாவின் புதிய ஆலையில் தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது.