'விக்கோ' விளம்பர துாதர்களாக ரேவதி, ஆலியா பட் ஒப்பந்தம்
'விக்கோ' விளம்பர துாதர்களாக ரேவதி, ஆலியா பட் ஒப்பந்தம்
'விக்கோ' விளம்பர துாதர்களாக ரேவதி, ஆலியா பட் ஒப்பந்தம்
ADDED : ஜூன் 08, 2024 01:22 AM

புதுடில்லி:'விக்கோ' குழுமம், நடிகையர் ரேவதி, ஆலியா பட் ஆகியோரை, அதன் விளம்பர துாதர்களாக தேர்வு செய்துள்ளது.
ஆயுர்வேத மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பில், ஈடுபட்டு வரும் விக்கோ, அதன் சந்தை இருப்பை இந்தியா முழுதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, தென் இந்திய சந்தைகளில், அதன் இருப்பை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த நோக்கத்துடன் துவங்கப்பட்ட புதிய விளம்பர பிரசாரத்திற்கு, தமிழ் நடிகை ரேவதி மற்றும் பாலிவுட் நடிகை ஆலியா பட் ஆகியோரை, விளம்பர துாதர்களாக விக்கோ தேர்வு செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு முதல், விக்கோ நிறுவன விளம்பரங்களில் ஆலியா பட் நடித்து வருகிறார். தற்போது ரேவதியும் புதிதாக, இணைந்துள்ளார்.
நிறுவனத்தின் தயாரிப்புகள், நாட்டின் பல்வேறு சந்தைகளை சென்றடைய, இவர்களது பிரபலம் உதவும் என்று நிறுவனம் கருதுகிறது. வரவிருக்கும் விளம்பரங்கள் மற்றும் நிறுவனத்தின் பல்வேறு சந்தைபடுத்துதல் திட்டங்களில், இவர்கள் இருவரும் இடம்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.