ரியல் எஸ்டேட் தனியார் பங்கு முதலீடு நடப்பாண்டில் 15 சதவீதம் அதிகரிப்பு
ரியல் எஸ்டேட் தனியார் பங்கு முதலீடு நடப்பாண்டில் 15 சதவீதம் அதிகரிப்பு
ரியல் எஸ்டேட் தனியார் பங்கு முதலீடு நடப்பாண்டில் 15 சதவீதம் அதிகரிப்பு
ADDED : ஜூலை 22, 2024 01:28 AM

புதுடில்லி:நடப்பாண்டின் முதல் பாதியில், ரியல் எஸ்டேட் துறையில் தனியாரின் முதலீடு, 15 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 25,000 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான 'நைட் பிராங்க்' தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில், நடப்பாண்டின் முதல் பாதியில், ரியல் எஸ்டேட் துறையில் தனியார் பங்கு முதலீடு, கிட்டத்தட்ட 25,000 கோடி ரூபாயாக உள்ளது.
கடந்தாண்டில் இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 21,600 கோடி ரூபாய் முதலீட்டுடன் ஒப்பிடுகையில், இது 15 சதவீதம் அதிகமாகும். அதிகபட்சமாக, மும்பையில் மட்டும் 1.41 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த முதலீட்டில், அதிகபட்சமாக கிடங்கு வசதிகளில் 52 சதவீதம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
குடியிருப்புகளில் 28 சதவீதமும்; அலுவலக இடங்களில் 20 சதவீதமும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படும் முதலீட்டுகள் அதிகரிக்கும்பட்சத்தில், இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறை மேலும் வலுப்பெறும்.
இவ்வாறு தெரிவித்துஉள்ளது.