முதலீட்டை ஈர்க்க வியட்நாமில் அதிகாரிகள்
முதலீட்டை ஈர்க்க வியட்நாமில் அதிகாரிகள்
முதலீட்டை ஈர்க்க வியட்நாமில் அதிகாரிகள்
ADDED : ஜூலை 09, 2024 06:59 AM
சென்னை : தமிழகத்தில் தோல் பொருட்கள் தொழில் துறையில் முதலீட்டை ஈர்க்க, தொழில் துறை அதிகாரிகள், வியட்நாம் நாட்டிற்கு சென்றுள்ளனர்.
'சிப்காட்' எனப்படும் தமிழக அரசின் தொழில் முன்னேற்ற நிறுவனம், ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் 348 ஏக்கரில், மாபெரும் தோல் காலணி மற்றும் துணை பொருட்கள் பூங்காவை அமைத்து வருகிறது. அதில், 201 ஏக்கரில் சிறப்பு பொருளாதார மண்டலம் இடம்பெறுகிறது.
சர்வதேச காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் கண்காட்சி, வியட்நாமில் நாளை முதல், 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதில், அந்த துறையில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
தமிழகத்தில், தோல் காலணி தொழில் துறையில், பல நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, சிப்காட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் செந்தில்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் வியட்நாம் சென்றுள்ளனர்.