ரூ.15,000 கோடிக்கு ஒப்பந்தம் எல் அண்டு டி பெற்றது
ரூ.15,000 கோடிக்கு ஒப்பந்தம் எல் அண்டு டி பெற்றது
ரூ.15,000 கோடிக்கு ஒப்பந்தம் எல் அண்டு டி பெற்றது
ADDED : ஜூலை 09, 2024 07:01 AM

புதுடில்லி : மத்திய கிழக்காசிய நாடுகளில், 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான, இரு சூரிய மின் சக்தி திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தங்களை பெற்றுள்ளதாக, எல் அண்டு டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆலைகளின் மொத்த திறன் 3.50 ஜிகா வாட் ஆகும். இதன் மதிப்பு 10,000 கோடி முதல் 15,000 கோடி ரூபாய் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலைக்கான விரிவான பொறியியல் மற்றும் கட்டு மானப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது-.
ஏற்கனவே, இந்நிறுவனம் கடந்த மாதம், இந்தியாவில் 'சோலார் கம் ஸ்டோரேஜ்' எனப்படும் சூரிய மின் சக்தி உற்பத்தி மற்றும் சேமிப்பு ஆலைக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எல் அண்டு டி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவு, தற்போது பெற்றுள்ள புதிய மெகா ஆர்டர்களுடன், மத்திய கிழக்காசிய நாடுகளில் ஏற்கனவே தொடங்கப்பட்ட மற்றும் தயாரிப்பில் உள்ள சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களையும் சேர்த்து, கிட்டத்தட்ட 22 ஜிகா வாட் ஒட்டுமொத்த மின் திறனை எட்ட உள்ளது.