திருப்பூர் பனியன் நிறுவனத்துக்கு ம.பி., முதல்வர் 'விசிட்'
திருப்பூர் பனியன் நிறுவனத்துக்கு ம.பி., முதல்வர் 'விசிட்'
திருப்பூர் பனியன் நிறுவனத்துக்கு ம.பி., முதல்வர் 'விசிட்'
ADDED : ஜூலை 24, 2024 11:52 PM

திருப்பூர்:கோவையில் இன்று நடக்கும் தொழில் முனைவோர் கூட்டத்தில் பங்கேற்க வந்த ம.பி., முதல்வர் மோகன் யாதவ், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தை நேற்று பார்வையிட்டார்.
ம.பி., மாநிலத்திற்கு தொழில்களை ஈர்க்கும் வகையில், அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கோவையில் இன்று நடக்கும் தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க, மோகன் யாதவ் நேற்று மாலை கோவை வந்தார்.
அதன்பின், திருப்பூர், அவிநாசி ரோடு ஆத்துப்பாளையத்தில் உள்ள பெஸ்ட் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தை பார்வையிட்டு பனியன் உற்பத்தி குறித்து கேட்டறிந்தார்.
முன்னதாக, முதல்வரை பெஸ்ட் நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜ்குமார், பெஸ்ட் ராமசாமி வரவேற்றனர்.
திருப்பூர் வருகை குறித்து, முதல்வர் மோகன் யாதவ், நிருபர்களிடம் கூறுகையில், ''எங்கள் மாநிலத்தில் தொழில் துவங்குவதற்கு தொழில் முனைவோர்களை வரவேற்கும் வகையில், கோவைக்கு வந்துள்ளேன். தொழில் துவங்க தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குகிறோம்,'' என்றார்.